Blog
திருப்பூர் – 5 பழச்செடிகள் அரசு மானிய விலையில் 50 ரூபாய் மட்டும்

13/10/2023, திருப்பூர் – பல்லடம் ரோடு, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இயங்கும் திருப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில், பழச்செடி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
எலுமிச்சை,மா, கொய்யா, நெல்லி, பலா ஆகிய 5 பழச்செடிகள் ஒரு தொகுப்பாக உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. பழச்செடி தொகுப்பு ஒன்றின் விலை 200 ரூபாய். அரசு மானியம் 150 ரூபாய், பயனாளிகள் தங்கள் பங்களிப்பு தொகையான 50 ரூபாய் மட்டும் செலுத்தி, மானிய விலைக்கு பழச்செடி தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 70926 08799, 95788 44874, 97918 91288 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
