அவிநாசி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பசுவராஜ். தையல் தொழிலாளியான இவர், அவிநாசி சார்பதிவாளர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் கிடந்த ரூ.35 ஆயிரத்தை எடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீஸார், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். பணத்தை தவறவிட்டவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles
-
மூன்றாம் வார ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி அம்மன் அலங்காரத்தில் திருப்பூர் அருள்மிகு பிளேக் மாரியம்மன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்மிகு போலீஸ் லைன் மாரியம்மன் -
🐣 சிறு முட்டையிலிருந்து பெரிய கனவு! ✨✍திருப்பூர் அரசு பள்ளி மாணவியின் கதையால் உந்துபெறும் வாசிப்பு உலகம்! ✨📚 -
சுப்பிரமணிய சாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டுதிருச்செந்தூருக்கு திருப்பூரில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் -
இந்தியாவின் மருந்துத் தரத்தை நிர்ணயிக்கும் IPC-யின் அறிவியல்
இயக்குநராக திருப்பூரை சேர்ந்த திரு. கலைச்செல்வன் நியமனம். வாழ்த்துக்கள் 💐