பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்..! வாழ்த்துக்கள்💐
Manu Bhaker wins India’s first medal at #Paris2024
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெண்கல பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
16 வது வயதில் இருந்தே சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் ஜொலித்து வந்த மனு பாக்கர் இதுவரை உலக கோப்பையில் எண்ணற்ற பதக்கங்களை வென்றிருக்கிறார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகப்பெரிய சரிவை சந்தித்தார். மன உளைச்சலில் இருந்த மனு பாக்கர் திடீரென்று துப்பாக்கி சுடுதல் விளையாட்டே எனக்கு வேண்டாம் என விட்டு சென்று விட்டார். பயிற்சியாளர் ரானாவின் உதவியுடன் கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி செய்து வந்த மனு பாக்கர் தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இருக்கிறார்.
எவ்வளவுதான் நமக்கு மன வலி ஏற்பட்டாலும், கடைசி வரை களத்தில் நின்று சரியான வழிகாட்டுதலில் போராடினால் நிச்சயம் நாம் சாதிக்கலாம் என்பதுதான் மனு பாக்கரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்கும் பாடமாகும்.
