2025ம் ஆண்டில் எத்தனை கிரகணங்கள் ? முதல் சூரிய கிரகணம் எப்போது நிகழ போகிறது தெரியுமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்!

சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இந்த கிரகணம் எப்படி ஏற்படுகிறது, எந்த நேரத்தில் நிகழவுள்ளது, இந்தியாவில் தெரியுமா என்பது குறித்த தகவலை பார்ப்போம். 2025 ஆம் ஆண்டில் மொத்த இரண்டு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.முதல் சூரிய கிரகணம் வருகிற மார்ச் 29 அன்று நிகழ உள்ளது.. பொதுவாக சூரியன் அல்லது சந்திரனின் நிழல் பூமியின் மீது படும் போது ஏற்படும் நிகழ்வை கிரகணம் என்கிறோம். வருடத்திற்கு 4 அல்லது 5 கிரகணங்கள் ஏற்படும். முழு கிரகணம், பகுதி கிரகணம் என இரண்டு வகையாக கிரகணங்கள் சொல்லப்படுகின்றன. சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மதியம் சரியாக 2.20 மணி முதல் மாலை 6. 13 மணிவரை நீடிக்கும். மேலும் மாலை 5.73 மணி அளவில் அதிகமாக இருக்கும்.2025ம் ஆண்டில் மொத்தமாக 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் என நான்கு கிரகங்கள் நிகழ உள்ளது. இவற்றில் சந்திர கிரகணங்கள் மட்டுமே முழுமையானதாக நிகழ உள்ளது. சூரிய கிரகணங்கள் இரண்டுமே பகுதி நேர கிரகணங்களாக தான் நிகழ உள்ளன. இந்த நான்கில் ஒரே ஒரு கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் காண முடியும். மற்ற மூன்று கிரகணங்களையும் காண முடியாது 2025ம் ஆண்டில் மார்ச் 29ம் தேதி முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. பகுதி நேர சூரிய கிரகணமாக நிகழ உள்ள இந்த கிரகணம், பகல் 02.20 மணிக்கு துவங்கி, மாலை 06.13 வரை நிகழ உள்ளது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. வட அமெரிக்காவில் மட்டுமே காண முடியும். 2வது சூரிய கிரகணமும் பகுதி நேரமாக உருவாக உள்ளது. செப்டம்பர் 21ம் தேதி இரவு 10.59 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 22ம் தேதி அதிகாலை 03.23 மணி வரை நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியாது.