தங்க செயினை ஒப்படைத்த காவலர் – பொதுமக்களுக்கு முன்மாதிரி!

காங்கயம் – பழைய ரோட்டில் வாக்கிங் சென்றபோது கிடந்த ஒரு சவரன் தங்க செயினை காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பணியாற்றி வருகின்ற திரு. பாலுசாமி அவர்கள் செயினை கண்டறிந்து, யாரும் உரிமை கோரவில்லை என்பதால் காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கபில்தேவிடம் ஒப்படைத்தார். நகையை தவற விட்டு சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். காவலர் திரு. பாலுசாமி அவர்கள் நேர்மையை எஸ்.பி., – ஏ.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Exit mobile version