திருப்பூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம்
திருப்பூர் மாவட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மார்ச் 6-ம் தேதி கலெக்டர் அலுவலக வளாக 4-ம் தளத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலக மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.
10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். தேர்வு செய்யப்படும் வேலை தேடுவோருக்கு, முகாமிலேயே பணி நியமனம் வழங்கப்படும்.
முகாமில் பங்கேற்க வருவோர், தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக அட்டை மற்றும் பயோடேட்டா விவரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். வேலை அளிக்கும் நிறுவனத்தினரும், வேலை தேடுவோரும், https://www.tnprivatejobs.tn.gov.in தளத்தில் வருகையை முன்பதிவு செய்ய வேண்டும்.
"திருப்பூர் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். தகுதியுள்ள நபர்கள் இந்த முகாமைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."
விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.