Training ← Admin

வீட்டிலிருந்தே தொழில் - காளான் வளர்ப்பில் 10 நாள் இலவச பயிற்சி!

March 4, 2026 Namma Tirupur
வீட்டிலிருந்தே தொழில் - காளான் வளர்ப்பில் 10 நாள் இலவச பயிற்சி!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் வீட்டிலிருந்தே சுயதொழில் தொடங்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் (RSETI) சார்பில் 10 நாட்கள் காளான் வளர்ப்பு மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சியில் கற்றுத்தரப்படும் பாடங்கள்:

சிப்பி காளான் மற்றும் பால் காளான் வளர்ப்பு முறைகள்.

காளான் அறுவடை மற்றும் சந்தைப்படுத்தும் உத்திகள்.

காளான் மூலம் ஜாம், ஊறுகாய், சூப் பவுடர் தயாரித்தல்.

ஹோட்டல் ஸ்டைல் சூப் மற்றும் பிஸ்கட் தயாரிக்கும் முறைகள்.

பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இது வங்கி கடன் பெற உதவும்.

"சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாக முன்னேறலாம்."

விவரங்களுக்கு, 94424 55923 அல்லது 99521 18441 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Ad Space Reserved

AdSense ads will appear here after approval

#காளான்வளர்ப்பு #இலவசபயிற்சி #திருப்பூர் #HomeBusiness #MushroomCultivation #SelfEmployment