Blog

மகாத்மா காந்திக்கும் திருப்பூருக்கும் இடையேயான நட்புறவு

இன்றைக்கு பின்னலாடை உற்பத்தியில்  உலகமே திரும்பி பார்க்கின்ற இடத்தில திருப்பூர் இருப்பது போல், காந்தியடிகள் இருந்த சமயத்தில்  கதர் ஆடை உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் முதன்மையா இருந்தது. 

இதற்கு ஆதாரமாக  1921 இல்  மகாத்மா காந்தி அவர்கள்  திருப்பூருக்கு வந்தபோது  ரயில்வே ஸ்டேஷனில்  500க்கும் மேற்பட்ட பெண்கள் கதர் ஆடை அணிந்து   ராட்டையில் நூல் நூற்று  காந்தியடிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.

திருப்பூருக்கு 1925 இல் மறுபடியும் வந்த மகாத்மா காந்தியவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய போது  “நான் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், பேசினாலும் கதர் ஆடை அணிந்து வந்திருப்பவர்களை காண்பது குறைவாக இருந்தது. ஆனால் திருப்பூரில் நடக்கக்கூடிய இந்த கூட்டத்தில் தான் அதிகமாக ஆண்கள் பெண்கள் அனைவருமே கதர் ஆடை   அணிந்திருப்பதை என்னால் பார்க்க முடிகின்றது”.

வருங்காலத்தில் கதரின் தலைநகரமாக திருப்பூர்  திகழும் என்று கூறினார்.

திருப்பூருக்கு காந்தியவர்கள் வந்து சென்றதனுடைய நினைவாக அவிநாசி ரோட்டில்  காந்திநகர் என்ற இடம் இருக்கின்றது.

காந்தி  திருப்பூர் வருகின்ற போதெல்லாம்  கோர்ட் வீதியில் உள்ள மங்கள விலாஸ்லயும், சுதந்திர போராட்ட வீரர் பிடி ஆஷர்  அவர்கள் இல்லத்திலும் தான் தங்குவாராம் .

மகாத்மா காந்தி- நேரு- திருப்பூர் குமரன் இவர்களுடையசந்திப்பு திருப்பூரில் உள்ள நஞ்சப்பா பள்ளி மைதானத்தில் தான் நடந்திருக்கிறது.

கடந்த 2019 அக்டோபர் மாதம் காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தியும் திருப்பூர் குமரனும் என்ற தலைப்பில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது 

மேலும் திருப்பூரில் இருக்கக்கூடிய  காந்திநகர் சர்வோதயா சங்கத்திலும், வித்யாலயம் ஸ்டாப்பில்  இருக்கக்கூடிய  சர்வோதயா சங்கத்திலும்  காந்தியோட  அஸ்தி உள்ளது.

காந்தியின் அஸ்தி திருப்பூரில் இருப்பது திருப்பூருக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது.