அவினாசியில் இருக்கக்கூடிய அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தன்னோட சொந்த 10 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்து இருக்கார் .
அது மட்டும் இல்லாமல் அவிநாசியில் நடக்கக்கூடிய வார சந்தைக்கு இவர் தாங்க இடம்கொடுத்து இருக்கார் .அவிநாசியில் இருக்கிற மக்களுக்கு நிறைய உதவிகள் செஞ்சிருக்காருங்க.
இவருடைய நினைவா அவிநாசி பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கிற ரவுண்டானாவ நல்லது நண்பர்கள் அறக்கட்டளை முயற்சியாலும் ஜே.ஏ.எம்& கோ ஜுவல்லர்ஸ் நிறுவனத்தினுடைய பங்களிப்பினாலும் புதுப்பொலிவோட பூங்கா மாறி அமைச்சிருக்காங்க.
இந்த ரவுண்டானாவில் காளைமாடு ,பஞ்சவர்ணக்கிளி, மான், வரையாடு இந்த மாதிரி அழகான சிற்பங்களோட அழகாக அமைத்து இருக்காங்க .இந்த வேலைப்பாடு இன்னும் நடந்துட்டு தாங்க இருக்கு .
நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த ரவுண்டானாக்கு சஞ்சீவ் ராவ் சர்கிள் அப்படின்னு பெயர் சூட்டுறதா சொல்லி இருக்காங்க.
சுதந்திர போராட்ட தியாகி நினைவா இந்த ரவுண்டானா அமைஞ்சது ரொம்ப ரொம்ப வரவேற்க கூடிய விஷயமா இருக்குதுங்க. மத்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களுடைய நினைவா இந்த மாதிரி அமைத்தார்கள் என்றால் ரொம்ப நல்லா இருக்குங்க.
-
மூன்றாம் வார ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி அம்மன் அலங்காரத்தில் திருப்பூர் அருள்மிகு பிளேக் மாரியம்மன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்மிகு போலீஸ் லைன் மாரியம்மன் -
🐣 சிறு முட்டையிலிருந்து பெரிய கனவு! ✨✍திருப்பூர் அரசு பள்ளி மாணவியின் கதையால் உந்துபெறும் வாசிப்பு உலகம்! ✨📚 -
சுப்பிரமணிய சாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டுதிருச்செந்தூருக்கு திருப்பூரில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் -
இந்தியாவின் மருந்துத் தரத்தை நிர்ணயிக்கும் IPC-யின் அறிவியல்
இயக்குநராக திருப்பூரை சேர்ந்த திரு. கலைச்செல்வன் நியமனம். வாழ்த்துக்கள் 💐